2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் கைது

Menaka Mookandi   / 2014 ஜூலை 30 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்., கொடிகாமம் சந்திப் பகுதியில் துவிச்சக்கரவண்டியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (29) இரவு கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

நல்லூர், சாவகச்சேரி ஆகிய இடங்களினை சேர்ந்த முறையே 38, 44 வயதுடைய இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

வீதி ரோந்தில் ஈடுபட்ட பொலிஸார், மேற்படி இரு சந்தேகநபர்களையும் மறித்து விசாரணை செய்த போது, அப்பகுதியில் தாங்கள் செல்வதற்கான தகுந்த காரணத்தினை கூறத் தவறியிருந்தனர்.

இதனையடுத்து இரு நபர்களையும் கைது செய்து, கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாக கொடிகாமம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .