2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கள்ளு விற்றவர் கைது

Menaka Mookandi   / 2014 ஜூலை 30 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நோன்புப் பெருநாள் தினத்தில் கள்ளு விற்பனையில் ஈடுபட்ட நாராந்தனை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (29) மாலை கைது செய்ததாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் புதன்கிழமை (30) தெரிவித்தனர்.

அத்துடன், சந்தேகநபரிடமிருந்து 12 போத்தல் கள்ளையும் மீட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சந்தேகநபர், அவரது வீட்டில் வைத்து கள்ளு விற்பனையில் ஈடுபடுகின்றார் என தமக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அவ்விடத்திற்குச் சென்று சந்தேகநபரினைக் கைது செய்ததாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .