2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்குப பிணை மறுப்பு

Menaka Mookandi   / 2014 ஜூலை 30 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்., நெல்லியடி, இராஜகிராமம் பகுதியினைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 26 வயதுடைய சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கு யாழ். சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி இன்று புதன்கிழமை (30) மறுத்துள்ளார்.

அத்துடன், மேற்படி சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறும், சிறுமியை கைதடியிலுள்ள சிறுவர் இல்லத்தில் சேர்க்கும்படியும் நீதவான் உத்தரவிட்டார்.

மேற்படி வழக்கு இன்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகள் இருவர், சந்தேகநபருக்கு பிணை வழங்கும்படி மன்றில் கோரியிருந்தனர். எனினும், அதற்கு நீதவான் மறுப்புத் தெரிவித்திருந்தார்.

மேற்படி சிறுமி தனது வீட்டிற்கு அருகிலுள்ள வித்தியாலயமொன்றுக்கு குடிநீர் எடுப்பதற்காக தனது தம்பியுடன் இம்மாதம் 13ஆம் திகதி சென்றுள்ளார். அவ்வேளை அங்கு நின்றிருந்த மேற்படி சந்தேகநபர், சிறுமியின் தம்பிக்கு மாம்பழமொன்றைக் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து, சிறுமியை கத்தி முனையில் மிரட்டி அருகிலுள்ள பற்றைக்குள் கொண்டு சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதன்போது, சிறுமி அலறவே, அங்கு கூடிய பொதுமக்கள் குறித்த சந்தேகநபரைப் பிடித்து, நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, மேற்படி சந்தேகநபர் சிறுவர் நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். மேற்படி சந்தேகநபர் ஏற்கனவே, இரண்டு பெண்களைத் திருமணம் செய்துள்ளதாகப் நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .