2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழில் இன்று ஆர்ப்பாட்டம்

George   / 2014 ஜூலை 30 , பி.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று வியாழக்கிழமை (31), யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நண்பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வடக்கில் தொடரும் ஊடக அடக்குமுறைகளை கண்டித்தும், பொய்க்குற்றச்சாட்டுக்களின் கீழ் ஊடகவியலாளர்களை சிறையிலடைக்கும் அரசினது சதி முயற்சிகளைக் கண்டித்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ஊடகவியலாளர்கள் கஞ்சாவுடன் சென்றனர் எனக்கூறி கடந்த வெள்ளிக்கிழமை (25) இரவு ஓமந்தைப் பகுதியில் ஊடகவியலாளர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

மேற்படி சம்பவத்தில் இராணுவத்தினரே தங்கள் வாகனத்தில் கஞ்சாவினை வைத்துவிட்டுத் தங்களைக் கைது செய்து ஓமந்தைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் என ஊடகவியலாளர் தெரிவித்ததுடன், இது தொடர்பில் குறித்த இராணுவ வீரர் மீதும், மற்றும் அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட பொலிஸ் அதிகாரி மீதும் ஓமந்தைப் பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர்கள் முறைப்பாடு பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .