2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வேலைவாயப்பு தொடர்பான கலந்துரையாடல்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


'மத்திய மாகாணத்தில் க.பொ.த, உயர்தரம் கல்வி கற்று அரச வேலைவாய்ப்பினை எதிர்பார்த்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு தொடர்பான கலந்துரையாடல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளாரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இன்று கொட்டகலை கோவில் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் 6000இற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையடலில்  மத்திய மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் அனுஷியா சிவராஜா, மத்திய மாகாண சபை விவசாய அமைச்சர் முத்தையா இராமசாமி, மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், அம்பகமுவ பிரதேசசபை தலைவர் வெள்ளையன் தினேஷ், மாகாண சபை உறுப்பினர்கள்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்புகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .