2025 ஜூலை 09, புதன்கிழமை

தந்தையைத் தாக்கிய மகனுக்கு விளக்கமறியல்

Super User   / 2014 ஓகஸ்ட் 02 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    கி.பகவான்

கிளிநொச்சி பளை இத்தாவில் பகுதியில் தனது தந்தையை தாக்கிய மகனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன்  வெள்ளிக்கிழமை (01) உத்தரவிட்டார்.

இது பற்றித் தெரியவருவதாவது,

மேற்படி இடத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி சுப்பிரமணியம் (வயது 59) என்பவர் மகனின் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் வியாழக்கிழமை (31) கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இது தொடர்பிலான விசாரணைகளை பளைப் பொலிஸார் மேற்கொண்டு, அவரது மகனை வெள்ளிக்கிழமை (01) கைது செய்தனர்.

மேற்படி சந்தேகநபரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (01) ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போது, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .