2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

குடும்பஸ்தரைக் காணவில்லை

Gavitha   / 2014 ஓகஸ்ட் 02 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ். அலவாய் கிழக்கினைச் சேர்ந்த இராசசிங்கம் கபில்நாத் (வயது 34) என்ற குடும்பஸ்தரைக் காணவில்லையென, அவரது மனைவி பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (01) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியாக கடமையாற்றும் மேற்படி நபர் கடந்த ஜுலை 20ஆம் திகதி வீட்டிலிருந்து சென்றதாகவும், அதன் பின்னர் இரண்டு நாட்கள் கழித்து கிளிநொச்சியில் இருந்து அலைபேசியில் உரையாடியதாகவும் மனைவி தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தனது கணவன் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் இத்தனை நாட்களாக முறைப்பாடு செய்யவில்லையெனவும் மனைவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழவின் யாழ். கிளையிலும் வியாழக்கிழமை (31) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனைவி தெரிவித்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக பருத்தித்துறைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .