2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வயல் காணி உறுதிகள் மாற்றப்படுகின்றன

Thipaan   / 2014 ஓகஸ்ட் 03 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளைப் பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில், வயல் காணிகள் என உறுதிப்பத்திரங்கள் கொண்டிருக்கும் காணிகள் சிலவற்றை, வீட்டுத்திட்டம் வழங்கும் பொருட்டு மேட்டுநிலக்காணி உறுதிகளாக மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீட்டுத்திட்டங்கள் மேட்டு நிலக்காணிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், கண்டவாளைப் பிரதேசத்தில், புளியம்பொக்கனையில் 20 பேருக்கும், கண்டாவளையில் 57 பேருக்கும், முரசுமோட்டையில் 02 பேருக்கும், ஊரியானில் ஒருவருக்கும் வீட்டுத்திட்டங்கள் வழங்குவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றது.

எனினும் அவர்களது காணி உறுதிகள் வயல் காணி உறுதிகளாகக் காணப்பட்டமையால் வீட்டுத்திட்டம் வழங்குவதில் சிக்கல் நிலைகள் ஏற்பட்டன.

இது தொடர்பாக, மாவட்ட விவசாயக் குழுக்கூட்டத்திலும் ஆராயப்பட்டது. அதன்படி வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டவர்களுடைய வயல்காணி உறுதிகளைக் கொண்ட காணிகளை மட்டும் மேட்டுநிலக் காணிகளாக மாற்றுவது என முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நெற் காணிகளை மண் இட்டு நிரப்பி மேட்டுக்காணிகளாக மாற்றுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட  நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் இ.தயாரூபன் ஜுலை மாதம் 18 ஆம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .