2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பருத்தித்துறைக்கு புதிய பிரதம பொலிஸ் பரீட்சகர்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 03 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்
 
பருத்தித்துறைப் பொலிஸ் தலைமைப் பீடத்திற்குப் புதிய பிரதம பொலிஸ் பரீட்சகராக ரி.எஸ்.மீடின் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்புப் பொறுப்பதிகாரியாக இதுவரைகாலமும் கடமையாற்றி வந்த மீடின், தற்போது, பருத்தித்துறைப் பொலிஸ் தலைமைப் பீட பிரதம பொலிஸ் பரீட்சகராக கடமையினைப் பொறுப்பேற்றுள்ளார்.
 
முன்னர், பருத்தித்துறைப் பொலிஸ் தலைமைப் பீடத்திற்கு பிரதம பொலிஸ் பரீட்சகராக 2011ஆம் ஆண்டு முதல் கடமையாற்றி வந்த ஏ.ஏ.டபிள்யு.ஜே.எஸ்.அபயகோன், பொலிஸ் தலைமையகத்தினால் கடந்த வியாழக்கிழமை (31) கண்டிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 
இதனையடுத்தே புதிய அந்தப் பதவிக்கு மீடின் நியமிக்கப்பட்டுள்ளனார்.
 
இந்த நியமனம் வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவினால் மேற்கொள்ளப்பட்டதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .