2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கரைவலை பகுதியில் சிறகுவலை பயன்படுத்திய மூவர் கைது

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 07 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

- யோ.வித்தியா, செல்வநாயகம் கபிலன்

வடமராட்சி தாளையடிப் பகுதியில் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் சிறகுவலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து பேரில், மூவரை புதன்கிழமை (06) கைதுசெய்தததுடன், அவர்களிடமிருந்து 4 இலட்சம் ரூபா பெறுமதியான வலை உபகரணங்களை மீட்டதாகப் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைப் பிரதிப்பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி வியாழக்கிழமை (07) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'கற்கோவளம் முதல் முல்லைத்தீவு வரையிலான கடற்பகுதி கரைவலைத் தொழிலுக்கு ஒதுக்கப்பட்ட இடமாகவிருப்பதினால், சிறகுவலைகள் (கலங்;கட்டி) பயன்படுத்திய மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

இதனை மீறி, ஐந்து மீனவர்கள் கலங்கட்டி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். வழமையாக கலங்கட்டி மீன்பிடிப்பதற்கு பூவரசம் தடி பயன்படுத்தப்படும் நிலையில் இவர்கள் கம்பிகளை உபயோகித்துக் கலங்களைக் கட்டியுள்ளனர்.

இதனால், கரை வலை மீன்பிடியில் ஈடுபடும், மீனவர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இது தொடர்பில் எமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்குச் சென்று, சிறகு வலை மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று மீனவர்களைக் கைது செய்தததுடன், அவர்கள் பயன்படுத்திய வலைகளையும் மீட்டோம்.

மேற்படி வலைகளைக் கழற்றுவதற்கு சுழியோடிகளே ஈடுபடுத்தப்பட்டனர். இதனால், நீரியல் வளத்துறைக்கு 15 ஆயிரம் ரூபா செலவாகியது' என அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .