2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மாட்டினை திருடி இறைச்சியாக்கியவருக்கு தண்டம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 07 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பூநகரிப் பகுதியில் மூதாட்டியொருவர் வளரத்து வந்த மாட்டினைத் திருடி இறைச்சியாக்கிய நபருக்கு 3000 ரூபா தண்டமும் மூதாட்டிக்கு 20 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்கவும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் வியாழக்கிழமை (07) உத்தரவிட்டார்.

மேற்படி சந்தேக நபர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், மூதாட்டி ஒருவர் வளர்த்து வந்த மாட்டினைத் திருடி அதனை இறைச்சியாக்கி வைத்திருந்தபோது, பூநகரிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.

தொடர்ந்து, இவருக்கு எதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் பூநகரிப் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.

குறித்த நபர் பிணையில் விடுவிக்கப்பட்டு, வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது.  இந்நிலையில், இவ்வழக்கு இன்று வியாழக்கிழமை (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சந்தேகநபரின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன.

இதனையடுத்து, நீதவான் மேற்படி நபரின் குற்றங்களுக்கு 3 ஆயிரம் ரூபா தண்டமும், 5 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட 6 மாதக் கடுழீயச் சிறைத் தண்டனையும் விதித்ததுடன், பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு 20 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்கும்படியும் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .