2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மீனவரை காணவில்லை

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 08 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, பொ.சோபிகா

யாழ்ப்பாணம், நயினாதீவு 4ஆம் வட்டாரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க வெள்ளிக்கிழமை (08) அதிகாலை சென்ற ஸ்ரீதரன் சுரேந்திரன் (வயது 26) என்ற 2 பிள்ளைகளின் தந்தையான மீனவரைக் காணவில்லையென யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களப் பிரதிப்பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி தெரிவித்தார்.

மேற்படி மீனவர் கடலுக்குச் சென்ற கட்டுமரம் நயினாதீவுக் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மீனவரைக் காணவில்லையென நயினாதீவு உபபொலிஸ் நிலையத்தில், அவரது மனைவியினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .