2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மருந்து தெளிக்கப்பட்ட மாம்பழங்கள் கைப்பற்றல்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 12 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்


அளவுக்கதிகமான மருந்துகள் பாவிக்கப்பட்டு யாழ்.சாவகச்சேரி பொதுச் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் ரூபா பெறுமதியான மாம்பழங்கள் செவ்வாய்க்கிழமை (12) காலை கைப்பற்றப்பட்டதாக சாவகச்சேரிப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பி.தளிர்ராஜ் தெரிவித்தார்.

சாவகச்சேரி சந்தையில், மருந்து தெளிக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், திடீரென மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே மேற்படி மாம்பழங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறினார்.

நுகர்விற்கு உதவாத வகையில் மேற்படி மாம்பழங்களில் மருந்துகள் தெளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட மாம்பழங்கள், சாவகச்சேரி நகர சபைத் தவிசாளர் முன்னிலையில் அழிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X