2025 ஜூலை 09, புதன்கிழமை

பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் கைது

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், மல்லாகம் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இரண்டு சந்தேகநபர்களை ஞாயிற்றுக்கிழமை (17) கைது செய்ததாக இளவாலை பொலிஸார் திங்கட்கிழமை (18) தெரிவித்தனர்.

மனைவியை அடித்த குற்றத்திற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பண்டத்தரிப்புப் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரும், கைகலப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சாந்தை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

மல்லாகம் நீதிமன்றத்தில் இவர்கள் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேற்படி இரண்டு சந்தேகநபர்களும் இரண்டு தடவைகள் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை.
 
இதனையடுத்து, மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ்தேவா, சந்தேக நபர்களுக்கும் எதிராக பிடியாணை பிறப்பித்து கடந்த 7ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைய மேற்படி இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்ததாக இளவாலைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .