2025 ஜூலை 09, புதன்கிழமை

மாணவி துஷ்பிரயோகம்; ஆசிரியருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மானிப்பாய் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவியை, தனியார் வகுப்பில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த 33 வயதுடைய ஆசிரியரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா ஞாயிற்றுக்கிழமை (17) உத்தரவிட்டார்.

அத்துடன், மேற்படி ஆசிரியர் நடத்தி வந்த தனியார் கல்வி நிறுவனத்தையும் மூடுமாறும் நீதவான் பணிப்புரை விடுத்தார்.

சங்கானைப் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஆசிரியர் ஒருவர் மானிப்பாய் செல்லமுத்து மைதானப் பகுதியிலுள்ள வீடொன்றில் தனியார் வகுப்புக்கள் நடத்தி வருகின்றார்.

இந்நிலையில், தனியார் வகுப்பிற்கு வரும் உயர்தர வகுப்பு மாணவியொருவரை தனியார் வகுப்பு நடத்தும் வீட்டில் வைத்து மேற்படி ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

இது தொடர்பில் அறிந்த அப்பகுதி மக்கள், மேற்படி ஆசிரியரை சனிக்கிழமை (16) பிடித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, மேற்படி ஆசிரியர் ஞாயிற்றுக்கிழமை (17) மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .