2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிறுமியை துஷ்பிரயோகம்: ஒருவருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.உரும்பிராயப் பகுதியில் 5 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 50 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் 1ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.சிறுவர் பெண்கள் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி திங்கட்கிழமை (18) உத்தரவிட்டார்.

மேற்படி சிறுமி கடைக்குப் பொருட்கள் வாங்குவதற்காக பெட்டிக்கடைக்குச் சனிக்கிழமை (16) சென்றவேளை, பெட்டிக்கடை நடத்தும் மேற்படி சந்தேகநபர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

கடைக்குச் சென்ற சிறுமி வீட்டுக்குத் திரும்பிவர தாமதமாகியதால், ஏன் பிந்தியது என பெற்றோர்கள் சிறுமியிடம் வினாவியுள்ளனர்.

இதன்போது, சிறுமி கடைக்காரர் செய்தவற்றைக் கூறியுள்ளார். இதனையடுத்து, மேற்படி சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை (16) முறைப்பாடு பதிவு செய்தனர்.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த பெட்டிக்கடை உரிமையாளரான மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து, சந்தேகநபர் யாழ். சிறுவர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (17) ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இதன்போது, மேற்படி நபரை திங்கட்கிழமை (18) வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

அதன்படி, மேற்படி நபரை மீண்டும், இன்று (18) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய வேளையில் எதிர்வரும் 1ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .