2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஊர்காவற்துறைக்கு குடிநீர் விநியோகம் ஆரம்பம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சால் ஊர்காவற்துறை தம்பாட்;டி கிராமத்துக்கான குடிநீர் விநியோகம் திங்கட்கிழமை (18) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

வடமாகாணத்தில் நிலவும் வறட்சியால் பல்வேறு இடங்களிலும் குடிநீருக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவிவருகிறது.

உள்ளூராட்சி மன்றங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகள் குடிநீர் வழங்கலை பவுசர்கள் மூலம் மேற்கொண்டு வந்தபோதும், குடிநீருக்கான தட்டுப்பாடு இன்னும் தீர்ந்தபாடில்லை.

இந்நிலையில் அண்மையில் வடமாகாண விவசாய அமைச்சில் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையில் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளுடன் குடிநீர் வழங்குதலை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான கலந்துரையாடல்இடம்பெற்றது.

இதில் உள்ளூராட்சி மன்றங்கள் மேற்கொள்ளும் குடிநீர் வழங்கும் சேவைக்கு மேலதிகமான உதவி தேவைப்படின் அதனை வடக்கு மாகாண விவசாய அமைச்சு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையிலேயே தம்பாட்டி கிராமத்துக்கு பவுசர்கள் மூலம் நீர் வழங்கும் திட்டத்தை வடமாகாண விவசாய கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு ஊர்காவற்துறை பிரதேச சபையுடன் இணைந்து ஆரம்பித்துள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .