2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விபத்தில் தாயும் மகனும் படுகாயம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கனகரத்தினம் கனகராஜ்


யாழ்ப்பாணம், பருத்தித்துறை, உதயகதிர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் முச்சக்கரவண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் அந்த முச்சக்கரவண்டியில் பயணித்த தாயும் மகனும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கரவெட்டியைச் சேர்ந்த த.சுரேந்தினி (வயது 24), த.நிலக்ஷன் (வயது 07) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர்.

மேற்படி முச்சக்கரவண்டியில் 6பேர் பயணித்த நிலையிலேயே அது விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து உழவு இயந்திரத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .