2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தமிழ் கைதிகளின் தடுப்புக்காவலை ஏற்க முடியாது: மு.த.தே.க

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 20 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


இலங்கைச் சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் முற்போக்குத் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஜயகாந்த் புதன்கிழமை (20) தெரிவித்தார்.

கைது செய்யபட்டு விசாரணைகளின்றி சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்;சியால் கவனயீர்ப்புப் போராட்டமொன்று யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக புதன்கிழமை (20) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே விஜயகாந்த் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் அங்கு தொடர்ந்தும் கூறியதாவது,

கருணா உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் அரசாங்கத்தின் சுகபோக வாழ்க்கையையும் அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அப்பாவித் தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகள் இன்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் வாழ்க்கை இல்லாமல் போய்க்கொண்டு இருக்கின்றது.

ஆகவே தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

போராட்டத்தின் முடிவில் ஜனாதிபதிக்கு கையளிக்கும்படி மகஜர் ஒன்று மாவட்டச் செயலகத்தில் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .