2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த கடற்படை வீரருக்கு பிணை

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 20 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

யாழ்ப்பாணம், வெற்றிலைக்கேணிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த கடற்படை வீரரை 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் புதன்கிழமை (20) உத்தரவிட்டார்.

அத்துடன், மேற்படி வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார். 
மீனவக் குடும்பமொன்றின் வீட்டிலே மேற்படி கடற்படை வீரர், கடந்த 13ஆம் திகதி அதிகாலையில் அத்துமீறி நுழைய முற்பட்டவேளை, ஊர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

தொடர்ந்து, பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட கடற்படை வீரர், கிளிநொச்சி நீதிமன்றத்தால் இன்று (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

தொடர்ந்து, மேற்படி வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபருக்கு நீதவான் பிணை வழங்கினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .