2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மாற்றுத்தொழில் ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 20 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்தில் இழுவைப்படகு மீன்பிடியில் ஈடுபட்ட 20 மீனவர்கள், தாங்கள் அந்தத் தொழிலைக் கைவிடுவதாயின் தங்களுக்கு மாற்றுவழியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தரும்படி கோரிக்கை விடுத்துள்ளதாக யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைப் பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி புதன்கிழமை (20) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, 

தடை செய்யப்பட்ட இழுவைப் படகு மீன்பிடியில் ஈடுபடும் 20 மீனவர்களை யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து செவ்வாய்க்கிழமை (19) எச்சரிக்கை செய்தனர்.

இழுவைப்படகு மீன்பிடித் தொழிலால், கடலில் மீன்வளங்கள் முற்றாக அழிக்கப்படுவதுடன் மீன் உற்பத்தியும் அழிவடையும் நிலை காணப்படுகின்றது. இது தொடர்பில் அவர்களுக்கு எடுத்துக்கூறியிருந்தோம்.

இதன்போது, அவர்கள், தாங்கள் இழுவைப் படகுத் தொழிலைக் கைவிடுவதென்றால் மாற்றுத் தொழிலுக்கான ஏற்பாடுகளைச் செய்து தரும்படி கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக விரைவில் நடவடிக்கை எடுத்து, யாழ். மாவட்டத்தில் இழுவைப் படகு மீன்பிடியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .