2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வடமாகாணசபை எமக்கு எதுவும் செய்யவில்லை: யாழ். மேயர்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

வடமாகாணசபை ஆட்சிப்பீடம் ஏறியதிலிருந்து யாழ்.மாநகர சபைக்கு எதுவும் செய்யவில்லையென யாழ் மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா புதன்கிழமை (20) தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபையின் விசேட கூட்டம் மாநகர கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (20) இடம்பெற்றது. இதன்போதே முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

வடமாகாண சபையுடன் நாங்கள் தொடர்புகொள்ள முனைகின்ற சந்தர்ப்பங்களில், அவர்களால் நாங்கள் நிராகரிக்கப்படுகின்றோம். அத்துடன், நாங்கள் அனுப்பும் கடிதங்களுக்கும் மாகாண சபை பதிலளிப்பதில்லையெனத் தெரிவித்தார்.

மேலும், மாநகர சபையால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் ஏற்பட்ட முறைகோடுகள் தொடர்பில் வடமாகாண சபையால் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக அறிந்தேன்.

இவ்வாறு விசாரணை செய்ய முற்படுபவர்கள் மாநகர சபையின் முன்னைய ஆட்சியாளர்களின் ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பிலும் விசாரணை செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .