2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பொருளியல் ஆசிரியர் வரதராஜனின் இறுதி ஊர்வலம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 20 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரபலப் பொருளியல் ஆசானும்; தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவருமான சி.வரதராஜனின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி இன்று புதன்கிழமை (20) நடைபெற்றது.

யாழ். பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகளும் அஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்று, பின்னர் வேம்படி மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் மாணவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரது புகழுடல் கோம்பையன் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுத் தகனம் செய்யப்பட்டது.

இதன்போது வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்கள் த.சித்தார்த்தன், க.சிவாஜிலிங்கம், க.சர்வேஸ்வரன், கே.சயந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் உட்பட அநேக அரசியல் பிரமுகர்களும் அதிக எண்ணிக்கையான கல்விமான்களும் பெருந்தொகையான மாணவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .