2025 ஜூலை 09, புதன்கிழமை

இலகு கடன் உதவி: டக்ளஸ் வழங்கிவைப்பு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 21 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமராட்சி கிழக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் வளர்ச்சிக்கென 20 இலட்சம் ரூபாய் இலகு கடன் வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடு செய்துள்ளார்.

அப்பகுதிக்கு வியாழக்கிழமை (21) விஜயம் செய்திருந்த அமைச்சர், மேற்படி சங்கத்தின் நிர்வாகத் தரப்பினரை சந்தித்து சங்கத்தின் தேவைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலின் பிரகாரமே மேற்படி கடன் தொகைக்கு அமைச்சர் ஏற்பாடு செய்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்கனவே மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, இச்சங்கத்தின் கட்டடம் கட்டிக் கொடுக்கப்பட்டதும் சங்கத்துக்கென பாரவூர்தி ஒன்று வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில் அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.குகேந்திரன், கூட்டுறவு ஆணையாளர் திரு.அருந்தவநாதன், ஈ.பி.டி.பியின் வடமராட்சி இணைப்பாளர் சிறிரங்கேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .