2025 ஜூலை 09, புதன்கிழமை

வீட்டுக்குள் அத்துமீறிய இராணுவ வீரர் கைது

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 28 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியிலுள்ள வீடொன்றினுள் புதன்கிழமை (27) இரவு அத்துமீறி நுழைய முற்பட்ட இராணுவ வீரர் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தம்மிடம் ஒப்படைத்ததாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸார் வியாழக்கிழமை (28) தெரிவித்தனர்.

கிளிநொச்சி இயக்கச்சி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி இராணுவ வீரர், தனியாக வசித்து வரும் பெண்ணொருவரின் வீட்டிற்குள்ளேயே புதன்கிழமை (27) நள்ளிரவு நுழைய முற்பட்டுள்ளார்.

இதனை அவதானித்த அப்பகுதி மக்கள், மேற்படி சிப்பாயை மடக்கிப் பிடித்து யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலேயே மேற்படி நபர், இராணுவ வீரர் என்பது தெரியவந்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .