2025 ஜூலை 09, புதன்கிழமை

இந்திய துணை தூதரகத்தால் நூல்கள் அன்பளிப்பு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தால், வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களின் நூலகங்களுக்கும் வழங்குவதற்கென 1,700 நூல்கள் வெள்ளிக்கிழமை (29) அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ள.

யாழ்.இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலேட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தியிடம் இருந்து மேற்படி நூல்களை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ். இந்தியத் துணைத்தூதரக அலுவலகத்தில் வைத்துப் பெற்றுக்கொண்டார்.

இந்து நாகரிகம், சமயம், விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், சமையல், கதை, தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட அண்மைய ஆங்கில நூல்கள் போன்றவை இவற்றில் அடங்குகின்றன.

இது தொடர்பில் எஸ்.டி.மூர்த்தி கூறுகையில்,

யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத்தூதரகம் செயற்பட ஆரம்பித்த பின்னர் கல்விப்புலத்தில் முன்னிலையிலுள்ளோர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடியதில் பல மாவட்டங்களின் நூலகங்களில் புதிய தமிழ்ப்புத்தகங்களின் சேர்க்கை அவசியமாகவுள்ளதை அறிந்துகொண்டோம்.

இதன்பிரகாரம் புதுடில்லியிலுள்ள வெளிவிவகார அமைச்சின் ஆதரவுடன் இந்தியத் துணைத் தூதரகமானது இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்களை ஐந்து மாவட்ட நூலகங்களுக்காக இந்தியாவில் கொள்வனவு செய்ய ஏற்பாடுகளைச் செய்தது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கென கொள்வனவு செய்யப்பட்ட புத்தகங்கள் ஏற்கனவே பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் கையளிக்கப்பட்டு விட்டன.

இந்திய அரசின் இந்த முன்னெடுப்பானது வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலுமுள்ள மாணவர் சமுதாயமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விமான்களும் இந்நூல்களை குறிப்பாக சர்வதேச ரீதியில் மிகப்பிரபலம் பெற்ற முக்கியமான சில நூலாசிரியர்களின் புத்தகங்களை வாசித்துப் பயன்பெறுவதை உறுதி செய்வதேயாகும்.

இந்தியத் துணைத் தூதரகம் இல.14, மருதடி ஓழுங்கை, நல்லூர் எனும் தனது முகவரியில் ஒரு நூலகத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஹிந்தி, தமிழ், ஆங்கில மொழிகளில் பல விடயங்களிலான ஆயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்களை இது கொண்டுள்ளது.

பொதுமக்கள் வேலை நாட்களில் காலை 10.30 முதல் 12.30 மணி வரையும் மாலை 2.30 முதல் 4.30 மணி வரையும் தூதரக நூலகத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .