2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலத்திரனியல் பொருட்கள் திருடியவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்
 

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, டச்சு வீதியிலுள்ள இலத்திரனியல் பொருட்களின் வர்த்தக நிலையத்தை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் செவ்வாய்கிழமை (02) உத்தரவிட்டார்.

டச்சு வீதியிலுள்ள மேற்படி இலத்திரனியல் கடை, கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் திகதி உடைக்கப்பட்டு, அங்கிருந்த 36 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டிருந்தன.

இது தொடர்பிலான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக அடையாளப்படுத்தப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் தலைமறைவாகியிருந்தனர்.

தொடர்ந்து, மேற்படி சந்தேகநபர்கள் நால்வரும் கடந்த ஜூன் மாதம் சாவகச்சேரி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, சந்கேதநபர்கள் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட வேளை, நால்வரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

மேற்படி நால்வரின் வழக்கு செவ்வாய்க்கிழமை (02) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதவான் விளக்கமறியலை நீடித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .