2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பூவரசங்குளம் குடியிருப்பு வீதி புனரமைப்பு

George   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடமாகாண சபையினால் ஒதுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து 9.5 மில்லியன் ரூபாய் செலவில், முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபையின் கீழுள்ள பூவரசங்குளம் குடியிருப்பு வீதி புனரமைக்கப்பட்டு வருவதாக, மாந்தை கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் அம்பலவாணர் தனிநாயகம், செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார்.

1.2 கிலோமீற்றர் நீளமான மேற்படி வீதியானது தார் கலவையிட்டு புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. 

இதற்கான பணிகள் 2013 ஆம் ஆண்டு இறுதிக் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு, தவிர்க்க முடியாத காரணத்தால் இடைநிறுத்தப்பட்டதுடன் தற்போது மீண்டும் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்த வீதி புனரமைக்கப்படுவதன் மூலம் பொன்னர், பூவரசங்குளம், விநாயகர்புரம், கரும்புள்ளியான் உட்பட்ட பல கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயனடைவார்கள் என அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .