2025 ஜூலை 09, புதன்கிழமை

யாழ். பல்கலைக்கழகத்தில் நிகாப் அணியத் தடை?

Kogilavani   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட முஸ்லிம் மாணவிகள் நிகாப் அணிவதற்கு மருத்துவ பீட நிர்வாகம் தடை விதித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இந்த நடைமுறை திங்கட்கிழமை (01) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவபீடத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகளில் ஒருவர் நிகாப் அணிந்து வருவதையிட்டே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருந்தும், இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக இல்லாமல், மாணவிக்குத் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

இது தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதிவாளரைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .