2025 ஜூலை 12, சனிக்கிழமை

மருந்தகத்தில் கொள்ளை

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 07 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ்.வடமராட்சி, புலோலியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றிலிருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள், இன்று ஞாயிற்றுக்கிழமை (07) அதிகாலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

மருந்தகம் மற்றும் மருந்தகத்தின் களஞ்சியசாலை ஆகியவற்றில் இருந்த பொருட்களே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் பெரும்பாலான பொருட்கள் பால்மா மற்றும் ஊட்டச்சத்து மா வகைகள் அடங்குகின்றன என பொலிஸார் கூறினர்.

கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் கணிப்பீடுகள் இடம்பெற்று கொண்டிருப்பதால் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் சரியான பெறுமதி தெரியவில்லையென பொலிஸார் கூறினர்.

மருந்தகம் மற்றும் அதன் களஞ்சியறை என்பன கள்ளத் திறப்பு போடப்பட்டு திறக்கப்பட்டு, பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு வாகனம் ஒன்றின் மூலம்
பொருட்கள் ஏற்றிச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .