2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கல்வியுடன் சுகாதாரம் இணைந்தால் வளமான எதிர்காலம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 09 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.அரசரட்ணம்

கல்வித்துறையும் சுகாதாரத்துறையும் இணைந்து செயற்பட்டால், வளமான எதிர்கால சந்ததியை உருவாக்க முடியும் என சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி கே.ரஜீவ்  தெரிவித்தார்.

சண்டிலிப்பாய் பகுதியில் மேற்கொள்ளப்படும் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (09) அவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே  அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'சுகாதாரத்துறையை சேர்ந்தவர்கள் பாடசாலைகளுக்கு வரும்போது மாணவர்களுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை பாடசாலை நிர்வாகம் வழங்க வேண்டும். இதனால், மாணவர்கள் மத்தியில் சுகாதாரம் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தமுடியும்.

நாட்டில் இளவயதுக் கர்ப்பம், சிறுவர் துஷ;பிரயோகம், சட்டவிரோத கருக்கலைப்பு என்பன நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதனால், பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பாடசாலை மாணவர்களாக இருக்கின்றனர்.  இது தொடர்பான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதாரக் கழகங்களை உருவாக்கி சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பிலும் பருவமழை ஆரம்பமாகவுள்ள நிலையில், டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளமையால் அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .