2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கிவைப்பு

George   / 2014 செப்டெம்பர் 09 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா, யோ.வித்தியா


நல்லூர் சங்கிலியன் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இலவச கண் மருத்துவ முகாமில், 200 பேருக்கு இலவசமாக மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த கண்மருத்துவ முகாம், நேற்று திங்கட்கிழமை(08) மன்ற தலைவர் சி.தியாகராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில்  300 பேர் வரையானோர் கலந்து கொண்டிருந்தனர்.

மருத்துவ முகாமிற்கு வந்தவர்களை, கண் வைத்தியர் இ.சந்திரகுமார் பரிசோதனைகளை மேற்கொண்டார். அத்துடன், சத்திரசிகிச்சைக்கான ஆலோசனைகளும் வழங்கினார்.

நல்லூர் சங்கிலியன் மன்றத்தால், 3 ஆவது முறையாக இந்த இலவசகண் சிகிச்சை முகாம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .