2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மீனவர்களுக்கு அபராதம்

George   / 2014 செப்டெம்பர் 09 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, செல்வநாயகம் கபிலன்

யாழ். வேலணை கடற்பரப்பில் தங்குசி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 33 மீனவர்களுக்கு தலா 7500 ரூபாய் அபராதம், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளதாக யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள பிரதிப்பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி செவ்வாய்க்கிழமை (09) தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை(07) கைது செய்யப்பட்ட மேற்படி மீனவர்கள், செவ்வாய்க்கிழமை (09) ஊர்;காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, மீனவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டதையடுத்து, நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் அபராதம் விதித்ததுடன், வலைகளை அழிக்கும்படியும் உத்தரவிட்டதாக பிரதிப்பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, யாழ். பாiஷயூர் பகுதியில் டைனமேற் வெடிவைத்து பிடிக்கப்பட்ட 200 கிலோ மீன்களையும், நீதிமன்ற அலுவலர் முன்னிலையில் காக்கைதீவு கடற்பரப்பில் வைத்து புதைக்கும்படி யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் செவ்வாய்க்கிழமை (09) உத்தரவிட்டார்.

யாழ் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் டைனமேற் வெடி வைத்து பிடிக்கப்பட்ட 200 கிலோ மீன்கள் பாiஷயூர் பகுதியில் கைப்பற்றப்பட்டன.

இருந்தும், மீன்களை வைத்திருந்த நபர்கள் அதிகாரிகளை கண்டதும் தப்பித்து ஓடியிருந்தனர்.

இதனையடுத்து, மீன்களை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் பாரப்படுத்தினார்கள்.

இதன்போது, கைப்பற்றப்பட்ட மீன்களை புதைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .