2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மாங்குளத்தில், விவசாய அமைச்சின் அலுவலகம் திறந்துவைப்பு

George   / 2014 செப்டெம்பர் 09 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் இணைப்பு அலுவலகம் மாங்குளத்தில் செவ்வாய்க்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மாங்குளத்தில் கண்டிவீதியில் முல்லை மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் இயங்கிவரும் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள இந்த இணைப்பு அலுவலகத்தை வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் திறந்து வைத்தார்.

வடக்கு மாகாண சபையின் அமைச்சுகளின் தலைமை அலுவலகங்கள் யாழ்ப்பாணத்தில் இயங்கி வருவதால் வன்னி பெருநிலப்பரப்பை சேர்ந்த மக்கள் தமது தேவைகள் தொடர்பாக யாழ்ப்பாணத்துக்கு வந்து செல்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பொதுமக்கள் இதனை சுட்டிக்காட்டியதையடுத்தே விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு தனது இணைப்பு அலுவலகம் ஒன்றை மாங்குளத்தில் திறந்துள்ளது.

அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் முதலாவது செயற்பாடாக நீர்ப்;பாசன திணைக்களத்தில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றிய 6 சிற்றூழியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கி அதற்கான நியமனக்கடிதங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

மாங்குளம் இணைப்பு அலுவலகம் ஏனைய மாகாண அலுவலகங்களைபோல சனி, ஞாயிறு தவிர்ந்த ஏனைய ஐந்து நாட்களும் இயங்கும் எனவும், இந்த அலுவலகத்தில் வாரத்தில் ஒருநாள் விவசாய அமைச்சர் பொதுமக்களை நேரில் சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலக திறப்பு விழாவில், வடமாகாண சபையின் பிரதி பேரவை தலைவர் அன்ரனி ஜெகநாதன், வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் சோ.சிவபாதம், பிரதி நீர்ப்;பாசன பணிப்பாளர்களான சோ.சண்முகானந்தன், வே.பிரேமகுமார், ந.சுதாகரன், ந.ஸ்ரீஸ்கந்தராஜா, அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் த.சர்வானந்தா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .