2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் தொடர்பிலான கலந்துரையாடல்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 11 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யோ.வித்தியா


யாழ்ப்பாணம் முகாமையாளர் மன்றத்தின் ஏற்பாட்டில், வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர், கழிவகற்றல் தொடர்பிலான பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் என்னும் தலைப்பிலான கலந்துரையாடல் யாழ்.பொது நூலகத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்றது.

யாழ்.பல்கலைக்கழக சிவில் பொறியியல்துறை தலைவர் எஸ்.சிவகுமார் மற்றும் சமூக மருத்துவத்துறை தலைவர் ஆர்.சுரேந்திரகுமார் ஆகியோர் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கருத்தரங்கில், நீரின் முக்கியத்துவம், சுகாதாரமற்ற நீரால் பரவும் நோய்கள், நிலத்தடி நீரின் பயன்பாடு, நீரை பயன்படுத்தும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

மேலும் 'நீரால் ஏற்படும் நோய்கள், அதிகமாக விவசாயிகளையே பாதிக்கின்றன. அதற்கு காரணம் விவசாயிகள் வகை தொகையின்றி கிருமிநாசினிகளை பயன்படுத்துகின்றமையால் ஆகும். எனவே மக்கள், காலத்தின் தேவை கருதி நீரை சுகாதாரமான முறையில் பயன்படுத்த வேண்டும்' எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில், சுகாதார ஊழியர்கள், பொதுமக்கள் உட்பட பலர்; கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .