2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இலவச பாதணிகள் வழங்கி வைப்பு

Gavitha   / 2014 செப்டெம்பர் 16 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்   

கல்வி அமைச்சினால் கஷ்ட, அதிகஷ்ட, மற்றும் பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாதணிகள் வழங்கும் செயற்பாட்டின் கீழ்,  போரதீவுப் பற்றுக் கல்விக் கோட்டத்திலுள்ள மட்.திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலய மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை (16) இலவச பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன.
 
மட்.திருப்பபழுகாமம்  கண்டுமணி மகாவித்தியாலய அதிபர் மு.உதயகுமார்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பட்டிருப்புக் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்  மு.விமலநாதன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாதணிகளை வழங்கி வைத்தார்.
 
இதன்போது, 704 மாவணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டதாக  அதிபர் மு.உதயகுமார் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .