2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வரட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உருளைக்கிழங்கு

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 17 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா, நா.நவரத்தினராசா

யாழ்.மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு தலா 5 கிலோ உருளைக்கிழங்குகள் வழங்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் புதன்கிழமை (17) தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றுடன் சேர்ந்து, உருளைக்கிழங்குகளையும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்காக நுவரெலியாவில் இருந்து 150 மெற்றிக்தொன் உருளைக்கிழங்குகள் எடுத்துவரப்படுவதற்காக யாழ்.மாவட்ட பாரவூர்தி சங்கத்தின் 7 பாரவூர்திகள் அனுப்பப்பட்டுள்ளன.

வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மேற்கொண்டு வரும் நடவடிக்கையிலேயே இந்த உருளைக்கிழங்குகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவை, அந்தந்த பிரதேச செயலகங்களினூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .