2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

காணிகள் துப்புரவாக்கும் நடவடிக்கையில் மாநகரசபை

Thipaan   / 2014 செப்டெம்பர் 17 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


- யோ. வித்தியா


யாழ். மாநகரசபை எல்லைக்குட்பட்ட 132 காணிகள் மாநகர சபையால் இனங்காணப்பட்டு, டெங்கு ஒழிப்பு துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, யாழ். மாநகரசபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன், புதன்கிழமை (17) தெரிவித்தார்.

யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் துப்புரவு செய்யப்படாமல் பற்றை படர்ந்திருக்கும் காணிகளை, மாநகர சபையால் அறிவித்தல் விடுக்கப்பட்டு, அக்காணிகளை பொறுப்பெடுத்து துப்புரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நடவடிக்கையானது, கடந்த 16ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், தொடர்ச்சியாகவும், காணிகள் இனங்காணப்பட்டு துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

காணிகளை துப்புரவு செய்வதற்கு காணி உரிமையாளர்களால் முடியாத மற்றும் மற்றும் வெளியூர்களில் உரிமையாளர்கள் உள்ள காணிகளே இவ்வாறு துப்புரவு செய்யப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .