2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

நீதிமன்ற உத்தரவுக்கமைய தங்குகூசி வலைகள் அழிப்பு

Thipaan   / 2014 செப்டெம்பர் 17 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கி.பகவான்


யாழ். சாவகச்சேரிக்கு அண்மித்த கடற்பரப்புக்களில் தடை செய்யப்பட்ட தங்குகூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம், புதன்கிழமை (17) உத்தரவிட்டார்.

அத்துடன், மீனவர்களிடமிருந்து மீட்கப்பட்ட 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்குகூசி வலைகளையும் மற்றும் மீன்களையும் சாவகச்சேரி நகர சபையின் கழிவகற்றும் இடத்தில் வைத்து தீயிட்டு அழிக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்.

நீதவானின் உத்தரவுக்கிணங்க, தங்குகூசி வலைகளையும் மீன்களையும் யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் இன்று மாலை தீயிட்டு அழித்தனர்.

கேரதீவு, தனன்கிளப்பு, கச்சாய் ஆகிய பகுதிகளில் யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள், புதன்கிழமை (17) காலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் மேற்படி 11 மீனவர்களும் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்த தங்குகூசி வலைகளும் அதனை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .