2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கட்டுக்கரை குளத்தில் மீன்குஞ்சுகள் விடப்பட்டன

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 19 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா, எஸ்.றொசேரியன் லெம்பேட்


வட மாகாண மீன்பிடி அமைச்சின் நிதி அனுசரணையில் மன்னார் மாவட்டத்திலுள்ள கட்டுக்கரை குளத்தில் 75 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடும் நடவடிக்கை வியாழக்கிழமை (18) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கட்டுக்கரை குளத்தை சார்ந்த 7 சங்கங்களைச் சேர்ந்த 634 நன்னீர் மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கருத்து கூறிய வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், 'வட மாகாணத்தில் உள்ள பல குளங்களில் மீன் குஞ்சுகள் விட வேண்டிய தேவை இருந்த போதிலும் தற்போதைய வரட்சி காரணமாக பல குளங்களில் நீர்மட்டம் வேகமாக குறைவடைந்து வருவதனால் மீன் குஞ்சுகளை வைப்பிலிட முடியாது' என்றார்.

அத்துடன், 'எதிர்வரும் மாதத்தில் பருவ மழை பெய்ய ஆரம்பித்ததும் ஏனைய குளங்களிலும் மீன் குஞ்சுகள் விடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .