2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

யாழ். ரயில் பாதையை மறித்து போராட்டம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 22 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன், கி.பகவான்


யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள சப்பச்சிமாவடி பிள்ளையார் கோவில் வீதியை மூடிவிட்டு, புகையிரத பாதை அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று திங்கட்கிழமை போராட்டமொன்றை நடத்தினர்.

இந்நிலையில், அப்பகுதிக்கு விரைந்த பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையார் கோவில் வீதியை அமைத்து தருவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

யாழ்.தேவி பரீட்சார்த்த புகையிரதம் திங்கட்கிழமை (22) காலை உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம் பயணிக்கவிருந்த நிலையில், தங்கள் வீதியை அமைத்து தந்தால் மட்டுமே புகையிரதத்தை செல்ல அனுமதிப்போம் என பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, அங்கு சென்ற பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா பொதுமக்களுடன் கலந்துரையாடியதுடன், பாதை அமைத்து தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதனையடுத்து அமைச்சரிடம் மகஜரை கையளித்துவிட்டு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .