2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அரச உத்தியோகஸ்தர்களுக்கு சைகை மொழிப்பயிற்சி

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

சமூக சேவைகள் அமைச்சால் அரச உத்தியோகஸ்தர்களுக்கு 10 நாள் சைகை மொழிப்பயிற்சி இவ்வருடம் நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்பு நடத்தப்படவுள்ளதாக அமைச்சின் மேலதிக பணிப்பாளர் ஸ்ரீமதி ராதா நாணயக்கார செவ்வாய்க்கிழமை (23) தெரிவித்தார்.

வாய்ப்பேச முடியாதவர்களுக்கு சேவைகள் வழங்கும் போது கேட்டல், மற்றும் கதைத்தல் தொடர்பில் பல இடர்பாடுகளை சமூக சேவை கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகஸ்தர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனால் சைகைமொழி பயிற்சி அரச உத்தியோகஸ்தர்களுக்கு அவசியமானதொன்றாக அமைந்துள்ளது. சைகை மொழி இலங்கை அரசாங்கத்தால் அரச கரும தொடர்பாடலுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
வாய் பேச முடியாதவர்கள் கருத்துக்களை பரிமாறி அவர்களது தேவைகளை, அரசாங்க துறையில் நிறைவேற்ற கூடியதாக இந்த வேலைத்திட்டம் நாடெங்கும் உள்ள மாவட்ட செயலகங்கள் ஊடாக நடத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .