2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். புத்தூர் வடக்குப்பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த கே.உதயராசா (வயது 53) என்பவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை (23) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரைக் கொண்ட கும்பல், வீடொன்றில் வைத்து இவர் மீது வாள்வெட்டு மேற்கொண்டுள்ளனர்.

முகத்தை மூடிக்கட்டியவாறு வீட்டினுள்; அத்துமீறி நுழைந்த இக்கும்பல், இவரை வாளால் வெட்டியுள்ளதாக பொலிஸார் கூறினர். 

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .