2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இலத்திரனியல் கடையில் திருட்டு

George   / 2014 செப்டெம்பர் 24 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ். சாவகச்சேரி அரசடி பகுதியில் அமைந்துள்ள இலத்திரனியல் பொருட்கள் விற்பனை நிலையத்திலிருந்த 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் ஆகியன செவ்வாய்க்கிழமை(23) இரவு திருடப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர், புதன்கிழமை (24) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

கடையின் பூட்டை உடைத்து, உள்நுழைந்து அங்கிருந்த 3 மடிக்கணிணிகள், 1 கமரா மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் என்பன இவ்வாறு திருடப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .