2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

நீர்த்தாங்கிகள் வழங்கிய ஆளுநர்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 25 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா

யாழ்., மாவட்டத்திலுள்ள ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் கிளிநொச்சியின் பூநகரி, கரைச்சி பிரதேச சபைகள் ஆகியவற்றிற்கு 25 நீர்த்தாங்கிகளை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து வியாழக்கிழமை (25) வழங்கினார்.

வடமாகாண ஆளுநர் நிதியிலிருந்து வழங்கப்பட்ட இந்த நீர்த்தாங்கிகளை, ஆலயங்கள், தேவாலயங்களின் நிர்வாகத்தினர் மற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்கள் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வரட்சியால் மக்கள் குடிநீருக்கு அவதிப்பட்டதையடுத்து, மக்களின் குடிநீர் தேவைகளை பொது இடங்களில் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு இந்த குடிநீர் தாங்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்தது.

25 நீர்த்தாங்கிகளும், கீரிமலை நகுலேஸ்வரம் 2, மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் 2, நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலயம் 3, புங்குடுதீவு பெருங்காட்டு கந்தசுவாமி ஆலயம் 2, புங்குடுதீவு கண்ணகி அம்மன் 2, ஊர்காவற்றுறை சிவன் ஆலயம் 2, ஊர்காவற்றுறை பத்தியடைப்பு முருகன் ஆலயம் 1, எழுவை தீவு சென்.தோமஸ் தேவாலயம் 2, நெடுந்தீவு மத்தி பிள்ளையார் ஆலயம் 2, நெடுந்தீவு கிழக்கு பிள்ளையார் ஆலயம் 1, பூநகரி பிரதேச சபை 3, கரைச்சி பிரதேச சபை 3 என்றவாறு வழங்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .