2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

புகைப்பிடித்த மாணவர்கள்: எச்சரிக்கையின் பின் விடுவிப்பு

Thipaan   / 2014 செப்டெம்பர் 25 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ற.றஜீவன்

யாழ். துன்னாலை தெற்கு பகுதியில் பாடசாலை சீருடையுடன் புகைப்பிடித்த  மூன்று பாடசாலை மாணவர்கள் புதன்கிழமை (24) கைது செய்யப்பட்டு பெற்றோர்கள் முன்னிலையில் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

துன்னாலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கல்விகற்கும் இந்த மூன்று மாணவர்களும் பாடசாலை நேரத்தில் சீருடையுடன் மதில் ஒன்றில் ஏறியிருந்து புகைப்பிடித்து கொண்டிருந்துள்ளனர்.

இதனை அவதானித்த பொதுமக்கள், நெல்லியடி பொலிஸாருக்;கு அறிவித்ததையடுத்து, அவ்விடத்துக்கு சென்ற பொலிஸார் மூவரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்துக்;குக் கொண்டு சென்றனர்.

தொடர்ந்து, மாணவர்கள் அவர்களது பெற்றோர் முன்னிலையில்; எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .