2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்; இளைஞனுக்கு விளக்கமறியல்

Gavitha   / 2014 செப்டெம்பர் 27 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். வல்வெட்டித்துறை தீருவில் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை புதன்கிழமை (24) துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 22 வயதுடைய சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி வெள்ளிக்கிழமை (26) உத்தரவிட்டார்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

மேற்படி சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று, நாகர்கோவில் சூசையப்பர் கோவிலடியிலுள்ள பற்றைக்குள் வைத்து மேற்படி இளைஞன் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

மேற்படி கோவிலடியில் சிறுமியொருவர் இளைஞனுடன் நிற்பதை கண்டு சந்தேகம் கொண்ட பொதுமக்கள், அவ்விடத்துக்கு விரைந்து சென்றவேளை, குறித்த சிறுமியை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு இளைஞன் தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து சிறுமி வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் பொதுமக்களால் ஒப்படைக்கப்பட்ட பின்னர் மேற்கொண்ட விசாரணைகளின் போது தப்பி ஓடிய இளைஞன் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி கூறியுள்ளார்.

இதனையடுத்து குறித்த இளைஞரை வியாழக்கிழமை (25)  வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

தொடர்ந்து, சந்தேகநபர் யாழ். சிறுவர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, நீதவான் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .