2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

எதிர்காலத்தை நோக்கியதாக செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்: டக்ளஸ்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 28 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய இளைய சமூகத்திற்கு மட்டுமல்லாது எதிர்கால சந்ததிக்கும் ஏற்ற வகையில் தூர நோக்கான சிந்தனையுடன் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள தேசிய ரீதியிலான வலைப்பந்து, கரப்பந்து, கூடைப்பந்தாட்ட மைதானங்களுக்கான சிரமதானப் பணியை ஞாயிற்றுக்கிழமை (28) ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீண்டகாலக் கோரிக்கையின் அடிப்படையில் இம் மைதானங்கள் அமையப் பெறவுள்ள நிலையில் இதற்கான செயற்திட்டங்கள் யாவும் விரைவுபடுத்தப்பட வேண்டும்.

இதற்காக வடமாகாண ஆளுநர் 3.5 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ள நிலையில் முதற்கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மைதான நிர்மாணப் பணிகள் நிறைவு பெற்றதும் இங்கு 24 மணித்தியாலங்களும் பயிற்சிகளை பெற்றுக் கொள்ளும் அதேவேளை உள்ளூர் மற்றும் தேசிய மட்டப் போட்டிகளையும் நடாத்த முடியும்.

அந்தவகையில், இன்றுள்ள இளைய சமூகத்திற்கு மட்டுமல்லாது எதிர்கால சந்ததிக்கும் ஏற்ற வகையில் செயற்திட்டங்கள் யாவும் தூர நோக்கு சிந்தனையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும்' என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .