2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தேங்காய் பறிக்கச்சென்றவர் மரணம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 28 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகரத்தினம் கனகராஜ்

தேங்காய் பறிப்பதற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை (28) மரத்தில் ஏறிய குடும்பஸ்தரொருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கரவெட்டி, கிழக்கு காட்டுப்புலம் பகுதியை சேர்ந்த சிற்றம்பலம் புலவீரசிங்கம் (வயது 48) என்பவறே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில், பருத்திதுறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இவர்; உயிரிழந்துள்ளார்.

இவர் கரவெட்டி தல்லையபுரம் பகுதியில் தேங்காய் பறிப்பதற்கு சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .