2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கிணற்றுக்குள்ளிருந்து வெடி பொருட்கள் மீட்பு

Gavitha   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


பளை முன்னையடி பகுதியிலுள்ள தனியார் காணியொன்றிலுள்ள கிணற்றில் இருந்து, பெட்டிகளுக்குள் கிறீஸ் பூசிய நிலையில் வைக்கப்பட்ட பெருமளவு வெடிபொருட்;கள், ஞாயிற்றுக்கிழமை (28) மாலை மீட்கப்பட்டதாக பளை பொலிஸார் திங்கட்கிழமை (29) தெரிவித்தனர்.

ஆர்.பி.ஜி. குண்டுகள் 10  மற்றும் கைக்குண்டுகள் 23 ஆகியனவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

கிணற்றில் நீர் வற்றிய நிலையில், கிணற்றின் அடிமட்டத்திலுள்ள மண்ணில் பெட்டிகள் இருப்பதை அவதானித்த உரிமையாளர், இது தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து, இராணுவத்தினருடன் சென்று குண்டுகளை மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

கிணற்றின் அடிப்பரப்பு மண் பகுதியாக காணப்படுவதாகவும் இதனால் தொடர்ந்து மண்ணை அகற்றி மேலும் ஆயுதங்கள் இருக்கின்றனவா என திங்கட்கிழமை (29) பரிசோதிக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .